Wednesday, April 29, 2015

லாக்கரில் உள்ள பணம், நகை பரிபோனால் இழப்பீடு எதுவும் பெறமுடியாது

 

தெரிந்து கொள்ளுங்கள்...

திடீரென வங்கியில் தீப்பிடித்தோ, கொள்ளை நடந்தோ
உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பரிபோனால் இழப்பீடு எதுவும் பெறமுடியாது.

இந்த விதிமுறை நம்மில் பலருக்குத் தெரியாது. அதனால், லாக்கரில் ரொக்கம் வைப்பதைவிட, சேமிப்புக்கணக்கில் வைப்பதுதான் சிறந்தது.வங்கியில் கொள்ளை நடந்தாலும் உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும்.

அதே போல ,லாக்கரில் நகையை வைப்பதைவிட அதை அடமானம் வைத்து நகை கடன் பெறலாம்.

உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம்.அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும் 25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிரீகள். மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி.நகை
தேவைபடும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.

இது நகை பாதுகாப்பு. வங்கியில் கொள்ளை நடந்தாலும்,
தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும்...

 

ஃப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீர்வுகள்! சி.சரவணன்

 

புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு (ஃப்ளாட்) வாங்கும் பலருக்கு அதற்கான பத்திரம் பதிவு செய்யும் விஷயத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. ஃப்ளாட்டுக்கான பத்திரத்தை எப்போது பதிவு செய்யவேண்டும்? கட்டுமான ஒப்பந்தத்தை எப்போது பதிவு செய்ய வேண்டும்? அதற்கான கட்டணங்கள் எவ்வளவு? என்கிற விவரம் ஃப்ளாட் வாங்கும் பலருக்கும் தெரிவதில்லை. இவற்றுக்கான விளக்கத்தைச் சென்னையைச் சேர்ந்த சொத்து ஆலோசகர் டி.பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

''தமிழக அரசு அண்மையில் கட்டுமான ஒப்பந்தத்தையும் (கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்ட்) பதிவு செய்யவேண்டும் எனச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை 2013, அக்டோபர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கட்டுமானச் செலவில் 2 சதவிகிதத்தை இதற்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக்கான பிரிக்கப்படாத மனையை (யூ.டி.எஸ்) பதிவு செய்யும்போதே, இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தையும் பதிவு செய்துவிட வேண்டும். யூ.டி.எஸ். பதிவுக்கு மொத்தம் எத்தனை சதுர அடி யூ.டி.எஸ். இருக்கிறதோ, அதற்கான அரசு கைடுலைன் மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரைத்தாள் கட்டணமாகவும், 1 சதவிகிதத்தைப் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

எனினும், ஏற்கெனவே ஃப்ளாட் வாங்க முன்பணம் அல்லது பகுதிப் பணம் கொடுத்து அல்லது முழுப் பணம் கொடுத்து யூ.டி.எஸ் பதிவு செய்திருப்பவர்கள், கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யத் தேவை இல்லை. அதற்கான கட்டணத்தைப் பில்டர் கேட்டால், கொடுக்கத் தேவை இல்லை. இது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும்தான். தனி வீடு மற்றும் வரிசை வீடுகளுக்குப் பொருந்தாது'' என்று விளக்கம் சொன்னவர், கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்வதால் என்ன நன்மை என்பதை விளக்கி சொன்னார்.

''அடுக்குமாடி கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய வேண்டும் என அரசாங்கம் சொல்வது வரவேற்கத்தக்கதுதான். சில புரமோட்டர்கள், அதிகமாக யூ.டி.எஸ். பதிவு செய்வது இதன் மூலம் தடுக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தப் பத்திரத்தில் ஃப்ளாட் நம்பர் பதிவு செய்யப்படுவதால், ஒரே ஃப்ளாட் ஒன்றுக்குமேற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படுவது அல்லது விற்கப்படுவது தடுக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்யப்படாத காலத்தில், ஏற்கெனவே சொன்ன வீட்டுக்குப் பதிலாக வேறு ஏதாவது ஒரு வீட்டை ஒதுக்கித் தருவது நடந்திருக்கிறது. இனி அப்படிச் செய்ய முடியாது. இந்த ஒப்பந்தத்தில் எந்த பிளாக், எந்தத் தளம், ஃப்ளாட் எண், சூப்பர் பில்ட்-அப் ஏரியா எல்லாம் பதிவு செய்யப்படுகிறது. இதனால், பில்டர் வேறு வீட்டை மாற்றிக்கொடுக்க முடியாது என்பதால் 2% கட்டணம் கூடுதலாகச் செலுத்தினாலும் வீடு வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பான அம்சமாக இது இருக்கிறது'' என்றவரிடம், 'கட்டுமான ஒப்பந்தத்துக்கான 2 சதவிகிதக் கட்டணம் எப்படி கணக்கிடப் படுகிறது?' என்று கேட்டோம்.

''இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஃப்ளாட் ஒன்றின் விலை ரூ.50 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இதில் யூ.டி.எஸ். சதுர அடிக்கான அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.16 லட்சம் எனில், கட்டுமானச் செலவு 34 லட்சம் ரூபாய். இங்கே ரூ.16 லட்சத்துக்கு 8%, அதாவது, ரூ.1,28,000 முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும். ரூ.34 லட்சத்துக்கு 2%, அதாவது, ரூ.68,000 கட்டுமான ஒப்பந்த பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும்'' என்றவர் சற்று நிறுத்தி, புதிய அடுக்குமாடி வீட்டை பதிவு செய்யும்போது கட்டவேண்டிய வேறு சில கட்டணங்கள் பற்றியும் விளக்கிச் சொன்னார்.

ஃப்ளாட் வாங்குபவர்கள் சேவை வரி (சர்வீஸ் டாக்ஸ்) மற்றும் மதிப்புகூட்டு வரி அல்லது விற்பனை வரி (வாட்) கட்டவேண்டி வரும். கட்டுமானச் செலவில் 30% கட்டுமானக் கூலியாக இருக்கிறது. இந்தக் கட்டுமானக் கூலியில் 12.36% சேவை வரியாகக் கட்டவேண்டும். அடுத்து, கட்டுமானச் செலவில் 70% கட்டுமானப் பொருட்களுக்கான செலவாக இருக்கிறது. இந்த 70 சதவிகித தொகையில் 4% மதிப்புக்கூட்டு வரியாகக் கட்ட வேண்டும்.

இந்தக் கட்டணங்களை மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் பொருத்தி பார்த்தால் சுலபமாக விளங்கும். கட்டுமானச் செலவு ரூ.34 லட்சத்தில் 30% என்பது ரூ.10,20,000. இதில் 12.36%, அதாவது, ரூ.1,26,072 சேவை வரியாகக் கட்ட வேண்டும். கட்டுமான செலவு ரூ.34 லட்சத்தில் 70% என்பது ரூ.23,80,000. இதில் 4%, அதாவது, ரூ.95,200 விற்பனை வரியாகக் கட்ட வேண்டும்'' என்றவரிடம், பழைய ஃப்ளாட் பதிவு செய்ய என்ன நடைமுறை? என்று கேட்டோம்.



புதிய ஃப்ளாட்டுக்கு இருப்பதுபோல் பழைய ஃப்ளாட்டுக்கு அதிகக் கட்டணங்கள் இல்லை. மனை மற்றும் வீட்டின் மதிப்பில் 7% முத்திரைத்தாள் கட்டணமாகவும், 1% பதிவுக்கட்டணமாகவும் செலுத்தினால் போதும். அதாவது, மனை மற்றும் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், அதில் 8%, அதாவது ரூ.4 லட்சம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாகச் செலுத்தவேண்டும். மனையின் மதிப்பு அரசு கைடுலைன் அடிப்படையிலும் வீட்டின் மதிப்பு, சிறிய வீடாக இருந்தால் சார் பதிவாளர் மூலமும் பெரிய வீடாக இருந்தால் பொதுப்பணித்துறை பொறியாளர் மூலமும் மதிப்பீடு செய்யப்படும். இதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்'' என்றார்.

இனி ஃப்ளாட் பத்திரப் பதிவு செய்யும்போது விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்துத் தெளிவாக இருப்பீர்கள்தானே!

 

.விகடன்

Friday, April 10, 2015

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் வழி

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

Generative Engine Optimization (GEO) Mechanics and Implementation Strategy

Generative Engine Optimization (GEO) is the technical methodology of structuring digital assets so artificial intelligence search models ext...