Friday, March 20, 2015

மாதவிலக்கு பிரச்சனை போக்கும் சூப்



மணத்தக்காளிக் கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி விதை  - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு  - 1 ஸ்பூன்
இஞ்சி   - 1 துண்டு
பூண்டு  - 4 பல்
சின்ன வெங்காயம் - 3
வெற்றிலை - 2
மிளகு - அரை ஸ்பூன்
இவைகள எடுத்து தண்ணி விட்டு சூப் மாதிரி செஞ்சு தேவையான அளவு உப்பு சேத்து காலையிலயும மாலையிலயும் சாப்பாட்டுக்கு முன்போ பின்போ சாப்பிட்டுக்கிட்டு வா..
மாத விலக்கு நேரத்துல 10 நாளுன்னு  3 மாசத்துக்கு  தொடர்ந்து இத சாப்பிட்டுக்கிட்டு வந்தா   மாதவிலக்கு பிரச்சனை காணாம போயிடும்..

Thursday, March 19, 2015

கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும்

கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்.!.

கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

கற்பூரவல்லியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்த வகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது. கற்ப மூலிகையில் கற்பூரவல்லிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வல்லி என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவல்லி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது. கற்பூரவல்லி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு ஒரு சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.

கற்பூர வல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும்.

சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து. குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வல்லி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.

கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் . கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு தொண்டைக் கம்மல் குணமாகும். கற்பூரவல்லி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.

 

Friday, March 13, 2015

மாதம் 100 ரூபாய் - 21 வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின் திருமணத்திற்காக ₹6,50,000/- செல்வமகள் திருமணத்திட்டம்

நமது அஞ்சலகத்தில் புதிய நல்ல திட்டம் ஒன்றை அமுல் படுத்தபட்டுள்ளது. செல்வமகள் திருமணத்திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தில பத்து வயதிற்க்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாவர்.! முதன் முதலாக ₹1000 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து உங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் இணைக்கலாம்..!அதன் பிறகு மாதம் 100 ரூபாய் மட்டும் செலுத்தி வர வேண்டும்.இது 21 வயதை தொட்டதும் உங்கள் குழந்தையின் திருமணத்திற்காக ₹6,50,000-/- கிடைக்கும் .மத்திய அரசின் சிறப்பான திட்டம் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

மிக இலகுவான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய தேவையானவை.!

(1) தந்தையின் புகைப்படம் ஒன்று.மற்று இருப்பிடம் உறுதி செய்ய அடையாள அட்டை.(வாக்காளர் அட்டை. அல்லது ஆதார் அட்டை நகல் ஓன்று)

(2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று நகல்

(3)₹1000 ஆயிரம் ரூபாய் பணம்.!

இது அனைத்து அஞ்சலகத்திலும்(post office)கிடைக்கப்பெறும்.!

உறுதி செய்யப்பட்ட தகவலை தருபவர்-முத்துக்குமார் அம்பாசமுத்திரம்

 

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? மருந்தை தேடி அலைய வேண்டாம்!

 

தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...

பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்...

சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது...

சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்...
தொடர்ந்து செய்து வந்தால்.....

அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....
{தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே....}

நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி

 

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வது எப்படி?



உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...!!!!????

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,

ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!

New Industry Guidelines Detail How to Buy Fabric Online Without Seeing It First

To buy fabric online without seeing it first, buyers must mathematically translate digital specifications like Grams per Square Meter and st...